புதிய அரசியல் கட்சிகளின் ஆட்டம் ஆரம்பமாக போகின்றது. இவர்கள் தலைவர்களா, இல்லை மக்களுக்கு சேவை செய்ய வந்த சேவகர்களா, இல்லை கோமாளிகளா, இல்லை கொள்ளை அடிக்க வந்த கும்பலா என்பதற்கு காலம் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
ஆரம்பமாகிறது புதிய முகங்களின் புது ஆட்டம். மக்களாகிய நாம் நமது வழக்கமான பழக்கமான வேடிக்கை பார்க்கும் கோமாளிகள் ஆவோம். குரங்குஆட்டியின் கையில் சிக்கின குரங்கு எவ்வாறு வேடிக்கை காட்டி ஆட்டம் போடுமோ, ஆடட்டும், புதிய அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள். வராமலா போக போகின்றது அடுத்த தேர்தல்? பிடிக்காத தலைவர்கள் தேர்தலில் நின்றால் எனக்கு எவரயும் பிடிக்க வில்லை என பொத்தானை பிரஸ் பண்ணும் உரிமையை மக்கள் பெற போகிறார்கள் என்பது தின்ன நிச்சயம். வேலை செய்யாத ஆட்சியாளர்களை திரும்ப வீட்டுக்கு அனுப்பும் உரிமையையும் மக்கள் பெற போவது நிச்சயம்.
ஜனநாயக நாட்டில், கொள்ளை அடிப்பவனுக்கு ஒரு காலம் என்றால் நல்ல மக்களுக்கும் ஒரு காலம் வரும். புராணத்தில் படித்தது என் நினைவுக்கு வருகிறது. அதர்மம் எப்பொழுதெல்லாம் வெற்றி பெறுகின்றதோ அப்பொழுதெல்லாம் கடவுள் தோன்றுவன்.தர்மத்தை நிலைநாட்டுவான்.அதர்மம் அழிக்கப்படும். தர்மம் வெல்லும். தலைவன் தோன்றுவன். தவறை திருத்துவான். தவறு புரிபவர்களை தட்டி கேட்பான்.
வாழ்க ஜனநாயகம்.
புபேஷ் பாலகிருஷ்ணன்
15th May 2011
சென்னை
No comments:
Post a Comment