நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இந்திய மக்களின்
ஜனநாயக பலத்தையே எடுத்து காட்டுகிறது.ஜனநாயக நாட்டில் வாழும் ஒவொவொரு குடிமகனின் ஓட்டும் மிக முக்கியமனதையே இது எடுத்து காட்டுகிறது.
இந்த வெற்றி, மாற்றம் தேடி அலைந்த குடிமகனின் வெற்றி. முக்கியமாக இந்த வெற்றி, தேர்ந்தேடுக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் வெற்றியல்ல. இது ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் எதிர்ப்பு அலை.
அதை அரியணையில் உட்கார போகும் புதிய அரசாங்கம் தெளிவாக உணர வேண்டும்.
நல்ல ஒரு அரசாங்கத்தை மக்கள் என்றுமே ஏற்றுகொள்வார்கள். தீய ஆட்சியை கொடுக்கும் அரசாங்கத்தை மக்கள் துக்கி ஏறிய நொடி பொழுது தயங்க மாட்டார்கள்.என்ன அதற்கு அடுத்த தேர்தல் வரை பொறுமையாக காத்திருப்பார்கள்.இதை ஆட்சியில் உட்காரும் கட்சிகள் உணர வேண்டும்.
அதே போல எல்லா இந்திய குடிமகனும் தனது ஜனநாயக உரிமையில் பங்கு கொள்ள வேண்டும். குறை குற்றம் சொல்வது அன்று குடிமகனின் வேலை.
நல்ல அரசாங்கத்தை நிறுவுவதில் பங்கு பெற வேண்டும். ஏனென்றால் இது நமது அரசாங்கம். நமக்காக நாமே ஏற்படுத்தும் அரசாங்கம். நம் அரசாங்கம். குறை சொல்வதை விட்டு சமுக மாற்றத்தில் பங்கு கொள்ள முன்வரவேண்டும். இதுவே நாம் நம் தேசத்துக்கு செய்யும் தலையாய கடமை என்பதை உணர வேண்டும்.தேசத்துக்கு செய்யும் கடமை தன் வீட்டுக்கு செய்யும் கடமை என கருத வேண்டும்.நாடு முன்றும். நாமும் முன்னேறுவோம்.
புபேஷ் பாலகிருஷ்ணன்,
14th May 2011
ஹைதராபாத்
No comments:
Post a Comment